7/20/10

இந்தியா ஒரு ஏழை நாடு என்று எவன் சொன்னது?

சுவிஸ் வங்கியில் நமது இந்தியர்களின் பணம் ரூபாய் 70,00,000 கோடி உள்ளது. அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இல்லை? ஆனால் இந்தத் தகவல் உண்மைதான். இன்னும் சில அதிர்ச்சி புள்ளி விவரங்கள் வருமாறு:-


1. சற்றே எண்ணிப் பாருங்கள்... சுவிஸ் வங்கியில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய் இந்தியர்களுக்கு சொந்தமானது என்றால் நமது இந்திய நாடு எவ்வளவு பெரிய பணக்கார நாடாகும். உலகில் உள்ள 180 நாடுகளில் நமது நாட்டினரின் பணம்தான் சுவிஸ் வங்கியில் உள்ள மிக உச்ச அளவு தொகையாகும். கருப்பு பணத்தின் பிறப்பிடமாக இந்தியா உள்ளது.


2. தங்கள் வங்கிகளில் உள்ள 70 லட்சம் கோடி ரூபாய்க்கு சொந்தமானவர்களின் பெயர்களை வெளியிடக் கோரி இந்திய அரசாங்கம் கேட்டால் அப்பெயர்களை வெளியிட சித்தமாக இருப்பதாக சுவிஸ் அரசாங்கம் இந்திய அரசாங்கத்திற்கு அதிகாரபூர்வ கடிதம் எழுதியுள்ளது.


3. சுவிஸ் அரசு நமது இந்திய அரசுக்கு எழுதிய அதிகாரபூர்வ கடிதத்தின் அடிப்படையில் இச்செய்தி ஏற்கனவே கடந்த 22-5-2008-இல் டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் பிற நாளிதழ்களில் வெளியாகி உள்ளது.


4. ஆனால் இதற்கு நமது இந்திய அரசு எந்த பதிலையும் அனுப்பவில்லை. அதாவது 1947 முதல் 2008 வரை சுவிஸ் வங்கியில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத்தின் விவரங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கும்படி இந்திய அரசானது சுவிஸ் அரசுக்கு பதில் கடிதம் எழுதவில்லை. மேலும் இது குறித்து எதிர் கட்சியினரும் எந்த ஆர்வமும் கட்டவில்லை. காரணம், சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தில் ஒரு பெரிய சதவிதம் நமது இந்திய அரசியல்வாதிகளுக்கு சொந்தமானது. அப்பணம் நமது இந்தியர்கள் ஒவ்வொவருக்கும் சொந்தமானது என்றுதான் சொல்வதுதான் பொருத்தமானதாகும்.


5. இந்தப் பணம் நமது நாட்டைச் சேர்ந்தது. இவ்வளவு பெரிய தொகையில் இருந்து நமது நாடு அது தனது அயல்நாட்டுக் கடனை 13 தடவை திருப்பி செலுத்தலாம். இத்தொகையில் இருந்து வரும் வட்டியை கொண்டு நமது மைய அரசின் ஓராண்டு பட்ஜெட் செலவை சமாளிக்கலாம். மக்கள் எந்த வரியையும் அரசுக்கு செலுத்த வேண்டியதில்லை. மேலும் 45 கோடி ஏழை குடும்பங்கள் ஒவொன்றுக்கும் தலா 1 இலட்சம் ரூபாய் வழங்கலாம்.


6. சுவிஸ் வங்கியில் மட்டும் 70 இலட்சம் கோடி ரூபாய் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது என்று கணக்கெடுத்துக் கொண்டால், மற்ற 69 வங்கிகளில் எவ்வளவு பணம் வைப்பீடு செய்யப்பட்டிருக்கும் ? சற்றே கற்பனை செய்து பாருங்கள். இந்தியர்கள் தங்கள் பணத்தை எவ்வளவு இழந்துள்ளார்கள்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது! இங்கு இன்னொரு இடர்பாடு உள்ளதும் கவனிக்கத்தக்கது. அதாவது சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் இறந்து விட்டால், அவரது கணக்கில் உள்ள பணத்திற்கு சுவிஸ் வங்கியே உரிமையாளராகிவிடும்.


7. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்திய பண முதலைகள் 'கர்ம வினை' என்ற சித்தாந்தை சுத்தமாக மறந்து விட்டார்களா? ஊழல், சுரண்டுதல் ஆகிய முறையற்ற வழிகளில் கிடைத்த அப்பணத்தை அவர்கள் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள நினைத்தாலோ/பயன்படுத்த முனைந்தாலோ அப்பணம் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எத்தகு கேடு பலன்களை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் சிந்திக்க மறந்து விட்டார்கள்.


8. இந்த உண்மை யாவும் நமது இந்தியர்கள் வாசித்திருப்பார்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பார்கள். ஆனால் பாவம் அவர்கள் என்ன செய்து விட முடியும்? அன்றாட பிழைப்பை ஒட்டி சொந்த செலவுக்கு சம்பாதிக்கவே அவர்களுக்கு நேரமில்லை. இந்நிலையில் அவர்கள் இதற்காக வருத்தப்பட்டு ஒரு பெரு மூச்சு மட்டுமே விட முடியும். எனினும் "இதுவும் ஒரு விடுதலை போராட்டமே". ஒரு பெரும் பொரளாதார விடுதலைக்கான போராட்டம். இதற்காக நாம் இந்தியர் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும்.


9. சுவிஸ் வங்கியில் உள்ள மேற்படி பணம் இந்திய மக்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் விளைந்தது. அது மீண்டும் இந்திய நாட்டிற்க்கு கொண்டு வரப்பட வேண்டும்.


10. நமது இந்திய தாய் மண்ணிற்கு செய்யும் சேவையாக, இந்தப் போராட்டத்திற்கு உங்கள் பங்களிப்பை உறுதி செய்ய, இங்கு நீங்கள் வாசித்த உங்கள் நண்பர்கள், உறவினர்கள் என எல்லோருக்கும் அனுப்பி வைத்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும். சிரமம் பார்க்காமல் இப்போதே ஆரம்பிக்கவும்.


இந்தியா ஒரு ஏழை நாடு என்று எவன் சொன்னது?

No comments:

Post a Comment